மீம்கள் – கீர்த்தி பெருசு

meme

மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெருசு என்பார்கள். ஒரு கோணங்கி முகபாவப் படம், அதுக்கு மேலே ஒரு செய்தி, படத்துக்கு கீழே ஒரு கிண்டல்…சின்ன விஷயம்தான், ஆனால் பல அரசியல்வாதிகளை தூங்கவிடாமல் செய்யும் ஆற்றல் படைத்தவைதான் மீம்கள்.

சமூக வலைதளங்கள் வழியாக எளிய முறையில் வலிமையாக கருத்துக்களைப் பகிரும் மீடியமாக இன்று “மீம்கள்” வளர்ந்துள்ளன. பல அரசியல் கட்சிகளின் ஊடகப் பிரிவுகளில் மீம்களுக்காகவே பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளனர் என்றால் பாருங்களேன்!

“மீம்” என்ற வார்த்தையை ரிச்சர்ட் டாவ்கின்ஸ் (1976) தனது பரிணாம வளர்ச்சி சம்பந்தப்பட்ட  “The Selfish Gene” என்ற நூலில் முதன் முதலில் பயன்படுத்தினார். “மிமீம்” என்ற கிரேக்க மூலச்சொல்லிலிருந்தே மீம் என்ற வார்த்தை மருவியது. அதன் பொருள் “நகல்” என்பதாகும்.

மீம்களில் பல வகைகள் உண்டு. நாம் வழக்கமாக முகநூலில் பார்க்கும் மீம் வகை “இமேஜ் மேக்ரோ” எனப்படும். அதாவது நடுவில் ஒரு படம், படத்தின் மேலும் கீழும் செய்திகள் / சிந்தனைகள் இடம் பெறுவது.

தமிழகத்தில் மீம் கிரியேட்டர்களின் கற்பகதரு வடிவேலு என்பது நமக்குத் தெரியும். அதே போல உலகம் முழுவதும் மீம்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் சில முகங்களை படத்தில் காணலாம்.

Advertisements
Posted in குறுந்தககவல்கள் | Leave a comment