நாம ஏன் காத்தால எந்திரிக்கணும்?

ஆபீசுக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி படுக்கையிலிருந்து எழுந்திருச்சு அவசரவசரமா அழுக்கு சாக்ஸையும், தூசு படிஞ்ச ஷூவையும் மாட்டிக்கிட்டு அரக்கப் பரக்க கிளம்பி, வண்டியை பேய் மாதிரி ஓட்டி, ரோட்ல போற வர்றவனையெல்லாம் மிரளவச்சு, அவன்கிட்ட கெட்ட வார்த்தையில் அர்ச்சனை வாங்கி, அவசரமாகக் கிளம்பியதில் அவசியமான ஏதோ ஒண்ண மறந்து வச்சு, அதனால ஆபீசர்கிட்ட வசவு வாங்கி, அப்செட் ஆகி, அந்தக் கோவத்தை வீட்டில வந்து மனைவிகிட்ட காட்டி, அவங்க நிம்மதியையும் கெடுத்து, அதனால ஒரு சண்டை வந்து, அந்த சண்டையால் தூக்கம் போய் உருண்டு புரண்டு படுத்து லேட்டா தூங்கி, மறுநாள்…ஆபீசுக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி படுக்கையிலிருந்து எழுந்திருச்சு அவசரவசரமா அதே அழுக்கு சாக்ஸையும், தூசு படிஞ்ச ஷூவையும் மாட்டிக்கிட்டு அரக்கப் பரக்க கிளம்பி…

இந்தக் கேவலமான சைக்கிள்ல இருந்து கீழே இறங்க விரும்புகிறீர்களா?… இது மட்டுமில்ல, இதுமாதிரி பல பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியா ஒரு தீர்வு இருக்கு…

“அதுதான் காத்தால எந்திரிக்கிறது…”

மேல சொன்ன பிரச்சனைளை சமாளிக்கிறதெல்லாம் எனக்கு பரவாயில்ல, அது கூட பழகிருச்சு ஆனா கத்தால எந்திரிக்கிறது இருக்கே, அது ரொம்ப கஷ்டம்னு சொன்னீங்கன்னா நம்மள அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்.

sentrayan

வாழ்க்கையில எதையாச்சும் பெரிசா சாதிக்கணும்னு நினைக்கிறவங்க எல்லார்கிட்டயும் இருக்கிற ஒரு அடிப்படை குணம், அவங்க எந்த துறையில சாதிக்க விரும்புறாங்களோ அதே துறையில் ஏற்கனவே சாதிச்சவங்கள ரோல்மாடலா வச்சு அவங்களோட daily habits என்னங்கிறத கண்டுபிடிச்சு அதையே தானும் செய்ய முயற்சிகிறதுதான்.

ஆன்மீகத்திலேயும் சரி, பில்கேட்ஸ், வாரன் பஃபெட் மாதிரி பொருளாதாரத்திலும் சரி அரிய பெரிய சாதனைகளைச் செஞ்சவங்க எல்லாருக்கும் இருக்கிறதா கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொதுவான பழக்கம் காலங்காத்தால எந்திரிக்கிறதுதான். சரி அதுல அப்படி என்னாதான் இருக்குன்னு பார்த்திடலாமா?

சரியான தூக்கப் பழக்கம்:

நீங்க காத்தால எந்திரிக்க ஆரம்பிச்சா, ஆட்டோமேட்டிக்கா ராத்திரி சீக்கிரம் தூங்கப் போயிடுவீங்க. இந்த சரியான தூக்க நேரத்தை மெய்ன்டெய்ன் பண்றது இருக்கு பார்த்தீங்களா? அது உங்களை பிடிக்க, பீடிக்க க்யூ கட்டி காத்திருக்கிற பல வியாதிங்க கிட்ட இருந்து உங்கள காப்பாத்தும்.

பிரார்த்தனை, உடற்பயிற்சிக்கு போதுமான நேரம்:

“எங்க சார் அதுக்கெல்லாம் நேரம் இருக்குன்னு” நீங்க அலட்சியமா ஒதுக்கி வச்ச prayer, excercise மாதிரி பல அத்தியாசிவமான நல்ல விஷயங்கள செய்றதுக்கு உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். இதெல்லாம் செஞ்சதுக்கப்புறம் கிடைக்கும் பாருங்க ஒரு மன அமைதியும், எனர்ஜியும் அத வச்சுகிட்டே நீங்க அன்னிக்கு பூராம் உசேன் போல்ட் மாதிரி ஓடலாம்.

காலையில நல்லா ஃபுல் கட்டு கட்டலாம்

சாப்பாட்டு பழக்கம் பத்தி நம்ம முன்னோர்கள் என்ன சொல்லி வச்சிருக்காங்கன்னா, காலையில நல்லா ஃபுல் கட்டு கட்டணும், மதியானம் ஒரளவுக்கு நல்லா சாப்பிடணும் , நைட்டு அரை வயித்துக்கு தான் சாப்பிடணும். அப்படி சாப்பிட்டா மார்பு பெருத்து வயிறு சிறுத்து அழகா இருப்போம். ஆனா நாம அத அப்படியே உல்டாவாப் பண்றதுனால மார்பு சிறுத்து வயிறு பெருத்து நம்ம உடம்பையும் உல்டாவாக்கி விட்டுடுச்சு.  நீங்க மட்டும் காலங்காத்தால எந்திருச்சு walking,அல்லது வேறு ஏதாவது excercise செஞ்சீங்கன்னா ஒரு ஏழரை எட்டு மணிக்கெல்லாம் வயித்தில அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடும், உங்களுக்கு நல்லா சாப்பிடவும் நேரம் கிடைக்கும். காலையில லேட்டா எந்திரிச்சு சாப்பிட நேரம் கிடைக்காமதானே காலை சாப்பாட்டை தவிர்க்கிறீங்க? அந்தப் பிரச்சனைக்கு இனி முற்றுப்புள்ளி வச்சிரலாம்.

இனி எதை செஞ்சாலும் ப்ளான் பண்ணி பண்ணலாம்:

காலைல சீக்கிரம் எந்திருச்சுட்டா அன்னிக்கு பண்ண வேண்டிய எல்லாத்தையும், அதாவது யார் யாரை புடிக்கணும், யார் யார்கிட்ட இருந்தெல்லாம் ‘எஸ்’ ஆகணும்னு எல்லாத்தையும் ப்ளான் பண்ண போதுமான நேரம் கிடைக்கும். அது உங்களை பல இடங்கள்ல பல்பு வாங்குவதிலிருந்து பாதுகாக்கும்.

ஆபீசுக்கு அழகா போகலாம்:

லேட்டா தூங்கி லேட்டா எந்திரிக்கிறதால ஷேவ் பண்றதுக்குக் கூட நேரமில்லாம அத டெய்லி தள்ளிவச்சு, தள்ளிவச்சு தேவதாஸ் மாதிரி ஆகி அந்தக் கோலத்தோட ஆபீசுக்கு போய், உங்க பாஸ் உங்களைப் பார்த்து பாசமாய் “என்னப்பா உடம்பு கிடம்பு சரியில்லையா?”- ன்னு கேட்டிருக்காரா? அவர் பாசமாவெல்லாம் ஒண்ணும் விசாரிக்கல, கார்ப்பரேட் கம்பேனிகள்ல பாஸ் நசூக்கா அப்படிக் கேட்டா “சனியனே! போய் ஷேவ் பண்ணித் தொலை”-ன்னு அர்த்தம்.

அதிகாலையின் அழகை இரசிக்கலாம்:

“இரவின்மீது வெள்ளையடித்தால் விடியல் என்று அர்த்தம்” இப்படியெல்லாம் பாட்டு எழுதணும்னா, அந்த விடியலோட அழகைப் பார்த்தாத்தான் முடியும். காலங்காத்தால மொட்டமாடிக்கு போய் நின்னு பாருங்களேன், அடிக்கிற ‘ச்சில்’ காத்தும், பறவைங்க பாட்டு சத்தமும், மேகங்களுக்குள்ள இருந்து சிவப்பு சூரியன் எழும்பி வர்ற அழகும்…கடவுள் அதிகாலை எந்திரிக்கிறவுங்களுக்காகவே ஒரு அழகான 5D ஷோவை தினமும் இலவசமா வச்சிருக்கார். அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும். அதில கிடைக்கிற மன அமைதியே ஒரு தியானத்துக்கு சமம்.

குடும்பத்தோடு நேரம் சிலவிடலாம்:

காலைல சீக்கிரமா எந்திருச்சு முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடிச்சிட்டீங்கன்னா சாயங்காலம் உங்களுக்கு நிறைய ஃப்ரீ டைம் கிடைக்கும். வீட்டுக்கு வந்து மனைவியோட சேர்ந்து ஜாலியா பேசிகிட்டே சூடா ஒரு காபி குடிச்சிட்டு, வீட்டுல இருக்க வண்டு சிண்டுகளோட கிரிக்கெட்டெல்லாம் சேர்ந்து விளையாடிப் பாருங்களேன். உங்க வீடே ஒரு குட்டி சொர்க்கமாயிடும். இதெல்லாம் நீங்க செய்யலைன்னா சனி-ஞாயிறுகள்ல இதையே காரணமா காட்டி இன்னிக்கு ஒரு நாளாச்சும் எங்களோட “ஸ்பெண்ட்” பண்ணுங்கன்னு ஷாப்பிங் கூட்டிட்டிப் போய் நிறைய “ஸ்பெண்ட்” பண்ண வச்சிருவாங்க…ஜாக்கிரதை!…

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதுமட்டுமில்லாம காலங்காத்தால எந்திரிக்கிற பழக்கமுலவங்க productivity மத்தவங்களவிட அதிகமா இருக்கு, காலையில எந்திருச்சு படிக்கிற பசங்க மார்க் நிறைய வாங்குறாங்க. இது எல்லாத்துக்குமே சர்வே ரிப்போர்ட் வரைக்கும் நெட்ல கிடைக்கும். போய் பார்த்துக்கங்க….

சரி! இனி “கோழி கூப்பிட எந்திரிக்கிறது எப்படி”-ன்னு பார்த்துட்டு கட்டுரையை முடிக்கலாம்.

அலாரம்:

செல்போன் அலாரம்லாம் வேலைக்கு ஆகாது, அவனுங்க குடுக்கிற பல ரிங்டோன்கள் தாலாட்டி தூங்க வைக்கிற மாதிரிதான் இருக்கு. இதுக்காக நல்ல டைம் பீஸ் அலாரமா வாங்கி கைக்கு எட்டாம கொஞ்சம் தூரமா வச்சிருங்க. அந்த அலாரம் இருக்கே அது உங்கள மட்டுமல்ல உங்க தெருவையே எழுப்பி விட்ரும். எல்லாரும் எந்திரிக்கட்டுமே! நம்மளே எந்திரிச்சதுக்கப்புறம் மத்தவனெல்லாம் எப்படி நிம்மதியா தூங்கலாம்?

காலையும் காதலியும்:

காதலியை மீட் பண்ணப் போகும்போது எப்படி ஒரு எதிர்பார்ப்பும், exitement-ம் இருக்கும்! அது மாதிரியே மறுநாள் காலை உங்களுக்கு அள்ளித் தரப்போகும் இன்பங்களை எண்ணி அந்த காலைப்பொழுதை மீட்பண்ண ஆவலுடன் படுக்கைக்கு போங்க…அதே உற்சாகத்தோட காலைல எந்திருச்சிருவீங்க…

கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்…

உங்களுக்குள்ள இருந்து ஒரு மோசமான எனிமி “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குன்னு” சொல்லிக்கிட்டே இருப்பான். பொல்லாத பய அவன்! அவன் மண்டையில ஓங்கி ஒரு தட்டு தட்டி அவன படுக்க வச்சிட்டு நீங்க எந்திருச்சிருங்க…

கொஞ்சம் உணவு, நிறைய தண்ணீர்:

டின்னர் கம்மியா சாப்பிட்டுட்டு, தூங்கப் போறதுக்கு முன்னாடி ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சுட்டு படுங்க. நீங்க வெளில வச்ச அலாரம் அடிக்கலைனாலும் உங்க உள்ள இருக்க அலாரம் உங்கள எழுப்பி விட்ரும். ஆர்வக் கோளாறுல தண்ணிய நிறைய குடிச்சுட்டீங்கன்னா அப்புறம் அலாரம் நைட் 12 மணிக்கெல்லாம் அடிச்சு எழுப்பி விட்ரும். அப்புறம் காலைல எந்திரிக்கிற மிஷன் இம்ப்பாஸிபிள் ஆகிடும்.

இந்தக் கட்டுரைய நெட் 11 மணிக்கு மேல உட்காந்து படிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா, மொதல்ல கம்பியூட்டர ஷட்-டவுன் பண்ணிட்டு போய் கால காலத்துல தூங்குங்க…

-விஜய்குமார் ஜெயராஜ்

Advertisements

About விஜய்

தனிமனித முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் அத்தியாவசிய தேவையோ, எதெல்லாம் ஊக்கப்படுத்துமோ, எதெல்லாம் அறிவை வளர்க்குமோ, எதெல்லாம் சிந்திக்கத் தூண்டுமோ அதெல்லாவற்றையும் இங்கு எழுதுகிறேன்!
This entry was posted in சுயமுன்னேற்றம். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s